மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கவுர் 66, நாட் சிவெர் 30 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.