இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடாவை சேர்ந்த புஷ்பவதி லூம்பா என்பவரால் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு அது உலகம் முழுவதும் வாழும் கைம்பெண்கள் துயர் துடைக்க பயன்படுத்தப்படுகிறது. 2010இல் ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் உலக கைம்பெண்கள் தினம் ஜூன் 23ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. கைம்பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்கவும், பொதுவெளியில் தடைகள், பாகுபாடுகள் நீங்கவும் இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.