ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உலக தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. தேயிலையின் நன்மையை முன்னிலைப்படுத்துவது, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பது, தேயிலை நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தேநீர் தினத்தின் அடிப்படை நோக்கங்கள் ஆகும். உலகளவில் பல நாடுகளில் பிரபலமான தேநீர் உடல்நலம், கலாச்சாரம், சமூக பொருளாதார விஷயங்களில் முக்கிய பங்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.