உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு இன்று இ-மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டது. இதெல்லாம் வருவதற்கு முன், தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.