உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது. 1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.