ஒருநாள் உலகக் போப்பை தொடரில் இன்று நடைபெறும்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது.