இந்த ஆண்டிற்கான
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை
கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை
கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும்,
இந்தியா -
ஆஸ்திரேலியா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி என்பதால்
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.