மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வைகாசி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வரும் ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.