புதுக்கோட்டை: படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெகபர் அலி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று (ஜன.31) காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டு மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதிக்காத வகையில் 100 கிலோ மீட்டர் தூரம் பாரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு வட்டாட்சியர் ராமசாமி தலைமையில் போலீசார் உதவியுடன் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.