ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக 'ஓரியண்ட் மகிளா விகாஸ் யோஜனா திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. பார்ட்னர்ஷிப் வணிகம் என்றால் 51 சதவீத பங்குகள் பெண் விண்ணப்பதாரர் வசம் இருக்க வேண்டும். 2 சதவீதம் வரை வட்டியில் சலுகைகளும் அளிக்கப்படுகிறது. இந்தக் கடனை ஏழு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸை வங்கியை தொடர்பு கொள்ளவும்.