புதுச்சேரி முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமணம் ஆகவில்லை எனக் கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதன்படி, முகமது ஷபான் சமூக வலைதளங்களில் பெண்களிடம் பேசி தன்னை ஒரு நல்ல மனிதனாக காட்டி தன்னை ஒரு பெரிய தொழிலதிபர், ஒரு இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறேன் என ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு கதையைச் சொல்லி பெண்களை குறிவைத்து மிரட்டி நகை, பணம் பறித்து வந்துள்ளார். அதன்படி, முகமது ஷபான் மீது சென்னையை சேர்ந்த பெண் தன்னிடம் 415 சவரன் வாங்கி மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.