தென்னாப்பிரிக்கா-க்கு எதிரான 3வது டி20 போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 17.1 ஓவர்களில் 84 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா (54*), ஷபாலி வர்மா (27*) ஆகியோரின் ரன் குவிப்பால் 10.5 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.