வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததால் அபராதம் பிடிக்கப்படுவதாக பல மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் புலம்பி வருகின்றனர். வங்கி நிர்வாகம் 300 முதல் 350 ரூபாய் வரை அபராதமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் ஆயிரம் ரூபாய் பெற்றும், தங்கள் கைகளுக்கு 650 ரூபாய் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளனர். பூஜ்ஜியம் வங்கி இருப்பு கணக்குக்கு மாற்ற மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பும் நடவடிக்கையும் எடுக்காததால் வங்கி கணக்கை மாற்ற முடியவில்லை என்று கூறுகின்றனர்.