கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க அடுத்த வாரம் முகாம் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு ஜூன்.04 ஆம் தேதி முதல் மொத்தம் 9,000 முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், இன்னும் முகாம்கள் அமைக்கப்படாததால் மகளிர் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இன்னும் 1 வாரத்தில் ரேஷன் கடைகள், நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்களில் முகாம்கள் முழுமையாக அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.