புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 1.40 லட்சம் பேருக்கு இன்னும் ரேஷன் கார்டு வராததால், அவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இணைவதற்கு, ஜூன் 04 ஆம் தேதி தமிழகம் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் ரேஷன் கார்டுக்கு, 1.40 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வசதியாக, ரேஷன் கார்டை விரைவாக வழங்குமாறு, அரசுக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.