கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19-வது தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்.15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.