கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 7ஆவது தவணை இன்று (மார்ச் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குகிறது. இந்தத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 6 மாதங்கள் தலா ரூ.1,000 என இதுவரை தமிழக அரசு சார்பில் ரூ.6,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்பட உள்ளது.