கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15 ஆம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.