கேரளா மாநிலம் மலாபுரத்தில் வேகமாக வந்த கார் வளைவில் திரும்பியபோது, கார் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததால் காரில் இருந்த குழந்தை மற்றும் பெண் ஆகியோர் கீழே விழுந்தனர். நல்வாய்ப்பாக பின்னால் வந்த கார் சட்டென நின்றதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.