ரூ.1000 கிடைக்கவில்லை.. பெண்கள் போராட்டம்

1469பார்த்தது
ரூ.1000 கிடைக்கவில்லை.. பெண்கள் போராட்டம்
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கவில்லை எனக்கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு கடந்த மாதம் முதல் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தகுதி இருந்தும் ரூ.1,000 கிடைக்கவில்லை எனக்கூறி புதுக்கோட்டையில் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி