லாரி மோதி விபத்து.. குழந்தையுடன் உயிர் தப்பிய பெண்கள்

66பார்த்தது
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கூலம்குளம் பகுதி சாலையில் முன்னால் சென்ற ஸ்கூட்டரை லாரி முந்திச் செல்ல முயன்றது. அப்போது, ஸ்கூட்டரின் மீது லேசாக மோதியது. இதில், நிலைதடுமாறிய ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கைக் குழந்தை மற்றும் பெண் பிள்ளையுடன் சென்ற இரண்டு பெண்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி