உ.பி: ஜான்பூரில் பெண் ஒருவர் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் - ரேகா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஸ்ரேயன்ஸ் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, முன்பகை காரணமாக பக்கத்து வீட்டு பெண் ஒருவர் அந்த குழந்தையின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டியுள்ளார். வலியால் துடித்த குழந்தை ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.