திருப்பத்தூர் மாவட்டம் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு தூய்மை பணிக்கு சென்ற ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாரின் அடிப்படையில், சிவசக்தி சாமியார் என அறியப்படும் அர்ச்சகர் தியாகராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த தியாகராஜனை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.