சென்னையில் இளம்பெண் ஒருவர் காதல் தோல்வியால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரிடம் பெண் காவலர் ஒருவர் செல்போனில் பேசியபடி காப்பாற்றியுள்ளார். 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீரா, பெண்ணிடம் செல்போன் மூலம் ஆறுதலாக பேசியுள்ளார். அந்த நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.