உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நகைகளை பார்ப்பதாக கூறி நகைக்கடையில் 2 கிராம் காதணிகளை (ரூ. 14,000) பெண் ஒருவர் திருடியுள்ளார். கடை உரிமையாளர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது நடந்த சம்பவம் முழுவதும் கடைக்காரருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து நகைக்கடை முதலாளி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.