சென்னை தாம்பரம் அருகே நடந்து சென்ற பெண் காவலரின் நகையை இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட இளைஞர்கள், பெண் காவலரை பின் தொடர்ந்து சென்று நகையை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.