கன்னியாகுமரி: கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட் மனைவி சகாய சில்ஜா. இவர்களது மகன் ஜோஹான் ரிஷி (4). கடந்த 2022ல் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஜோகன் திடீரென மாயமானான். தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், சிறுவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா மீது சந்தேகம் அடைந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனை நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.