வேலூர் பள்ளிகொண்டா அருகே, தேங்காயை எடுத்து சென்றதை முறையிட்ட மூதாட்டி பத்மா மற்றும் அவரது குடும்பத்தினரை அண்டை வீட்டு பரிமளா மற்றும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் பத்மாவின் மகள் குமாரி மண்டை உடைந்து காயமடைந்தார். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை இல்லை என தெரிவித்து குடும்பத்தினர் பாதுகாப்பு கோரினர். தாக்குதல் சம்பவம் பதிவாகிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.