மயிலாடுதுறை: தரங்கம்பாடி இலுப்பூரில் பெண் மர்ம மரண வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டார். பஜில் முகம்மது (61) என்பவரின் மனைவி மர்ஜானாபேகம் (54), கடந்த மாதம் 20ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். போலீசில் அளித்த புகாரில், மர்ஜானாவின் 14 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். விசாரணையில், குடும்ப பிரச்னையில், பஜில் தாக்கியதில், மர்ஜானா இறந்ததும், இதை மறைத்து நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.