கர்நாடகா: பெங்களூரு ராமமூர்த்தி நகரில் 28 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜன., 24) காலை கல்கெரே ஏரிக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.