டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் Reddit என்ற இணையதள பக்கத்தில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர், மொட்டை மாடியில் இருந்து தன்னை பார்த்தபடி சுயஇன்பம் செய்ததாக குற்றம்சாட்டி, அந்நபரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், இதனை தனது குடும்பத்தாரிடம் கூறினால், மிகவும் கவலைப்படுவார்கள் எனவும் தனது மீது கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் எனவும் கூறியுள்ளார். “போலீசிடம் செல்லவும் விரும்பவில்லை, தயவுசெய்து ஏதேனும் அறிவுரை இருப்பின் கூறுங்கள்” என கேட்டுள்ளார்.