சேலம்: எடப்பாடி அடுத்த செட்டிக்குறிச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், வீடு புகுந்து கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினியும் அவரது கணவர் தனுஷ்கண்ணனும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜன.21 அன்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு அடியாட்களுடன் வந்த ரோஷினியின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்றனர்.