கேரளா: கோழிக்கோடு மலப்புரம் தனல்லூரைச் சேர்ந்த சைனபா என்பவர், கப்கேக் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி பலியாகியுள்ளார். குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், கப்கேக்கின் தூண்டு ஒன்று சுவாசப் பாதையில் சிக்கியுள்ளது தெரியவந்தது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயக்கநிலைக்கு சென்றதால், அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி சைனபா உயிரிழந்தார்.