சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தற்கொலையா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பெண் கவிதா என்பதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மடியிலேயே தாய் மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த அதிர்ச்சியில், கவிதா மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.