இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டிப்பிடிக்கவும், ஆறுதல்படுத்தவும் ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கி வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண், கட்டிப்பிடி வைத்தியத்தில் நிபுணராவார். தனிமையில் இருக்கும் பலரும், ஆறுதலான அணைப்புக்கு இவரிடம் செல்கின்றனர். இவரின் கட்டிப்பிடி வைத்தியத்தால் ஸ்ட்ரெஸ் குறைவதாகவும், மனநிம்மதி அடைவதாகவும், மகிழ்ச்சி அதிகரிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.