தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் வசித்து வருபவர் மௌனிகா. இவர், பூபல்பள்ளியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் போஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். அது திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. மேலும், அந்த இளைஞர் மௌனிகாவின் வீட்டில் மூன்று நாட்களாக தங்கியுள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், அப்பெண்ணையும் இளைஞரையும் நடுரோட்டில் கட்டிவைத்து வெளுத்தனர். தொடர்ந்து போலீசிடம் அவர்களை ஒப்படைத்தனர். மௌனிகாவின் கணவர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.