சேலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி நடத்தப்பட்ட மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி அரவிந்த் என்பவரிடம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வித்யாராஜ் என்ற பெண் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.