ஆர்சிபி அணியை விட்டு விலகும் விராட் கோலி?

85பார்த்தது
ஆர்சிபி அணியை விட்டு விலகும் விராட் கோலி?
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி, விராட் கோலியை ரீட்டெஷன் செய்ய வேண்டாம் என்கிற முடிவை எடுக்கப்போவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை ஆர்சிபி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை விராட் கோலி வெளியேறினால் அது ஆர்சிபி அணிக்கும், விராட் கோலி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி