விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பான தகவலுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். காளியம்மாள் அதிருப்தியில் உள்ளதாகவும் தவெகவில் இணைய உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், காளியம்மாள் “எந்த அனுமானத்தின் அடிப்படையில் அவை கூறப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "தற்போது என் உடல்நிலை சரியில்லை. ஏதாவது தகவல் இருந்தால் கூறுகிறேன்" என விளக்கமளித்துள்ளார்.