இந்து முன்னணி சார்பில் மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இது குறித்து இன்று (ஜூன் 24) மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “அவர்கள், முருகன் மாநாடு நடத்தியதே அரசியல் நோக்கத்துடன்தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டை நடத்துவார்களா? 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், இந்த மாநாடு பயனற்றது என விட்டுவிடுவார்கள்" என்றார்.