எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. முதல்வர் பொறுப்பு, ஆட்சியில் பங்கு என இரண்டு கட்சிகள் இடையே மறைமுகமாக பனிப்போர் நடந்து வருகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்த விஷயத்திலும் சர்ச்சைகள் தொடருகின்றன. இதனிடையே, செங்கோட்டையன், வேலுமணி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்கள் என பாஜக திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த அன்வர் ராஜா, "இந்த கற்பனை கேள்வி திட்டம் பாஜகவிடம் இருக்காது. இருந்தால் அது தவிடுபொடியாகும்" என தெரிவித்தார்.