அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக முக்கிய தலைவர்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரையும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.