பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி ஒரே வாரத்தில் 2வது முறையாக சந்தித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மகன் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஏற்கனவே தைலாபுரத்தில் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியிருந்தார்.
ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, சமரச கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும் என ராமதாஸ் சூசகமாக தெரிவித்திருந்தார்.