தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு முடிவு எடுப்பாரா? என்ற கேள்வியெழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கக்கோரி அக்கட்சி சார்பில் கடந்த ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நாளையும் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே ஒ.பன்னீர்செல்வம் அமர்வாரா? அல்லது ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை வழங்கப்படுமா? என பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.