மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே.சுதீஷ்?

77பார்த்தது
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே.சுதீஷ்?
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சுதீஷ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அதிமுக -தேமுதிக செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் தரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக நாளை (மே.31) வெளியிடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி