தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன் 11) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அளித்த பதில் பின்வருமாறு., "தேமுதிக தனித்து போட்டியிடுமா? கூட்டணியா? என்பது குறித்த தகவலை தற்போது கூற இயலாது. தனித்து போட்டியிடும் விஷயத்தை காலம் தான் சொல்லும். முன்னதாகவே பல தேர்தல், இடைத்தேர்தலில் தனியாக தேமுதிக களம்கண்டுள்ளது. அனைத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என பேசினார்.