நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இரு காட்டு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கிருந்த பொதுமக்கள் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆக்ரோஷமாக இரண்டு காட்டு மாடுகளும் மோதிகொண்ட நிலையில், ஒரு மாடு மட்டும் அங்கிருந்து தப்பிச்சென்றது. மற்றொரு மாடு அங்கேயே நின்றுகொண்டிருந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.