சேலம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை, கூ.குட்டப்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி உள்ளது. ஏற்காடு வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. டேனிஷ்பேட்டை உள்கோம்பை அடிவாரம் பகுதிகளில் வத்தியூர், பாலமேடு இடையில் செல்லும் சரபங்கா ஆற்று படுக்கையில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வாழை, பாக்கு, தீவன பயிர்கள், நெல், சோளம் ஆகிய பயிர்கள் சேதமடைந்தன.