மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

72பார்த்தது
மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நாமக்கல்: திருச்செங்கோடு வரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, தறிப்பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகின்றன.
குழந்தை இல்லாததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு தகராறில் ஆத்திரமடைந்த ராஜாமணி, கணவரை கீழே தள்ளி கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த முத்துசாமி உயிரிழந்தார். திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ராஜாமணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி