கொல்கத்தா அருகே தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்துடன் தனது காதலனுடன் மனைவி ஓட்டம்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப செலவுக்கு பணம் தேவை எனக் கூறிய மனைவி, தனது கணவரை கட்டாயப்படுத்தி, சிறுநீரகத்தை விற்க வைத்துள்ளார். ஓராண்டுக்கும் மேல் காத்திருந்து சமீபத்தில் கிட்னியை விற்க கணவர் ஒப்புக்கொண்டார். குடும்ப பிரச்னைகள் அனைத்தும் இனி நீங்கிவிடும் என கணவர் நிம்மதியடைந்த நிலையில், அந்த பணத்துடன் மனைவி தனது காதலனுடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.